Categories
உலக செய்திகள்

விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட மேகக்கூட்டங்களின் புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!!!

கடந்த நவம்பர் மாதம் முதல் அமெரிக்காவை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான கெய்லா பரோன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அவர் மேகக்கூட்டங்களையும், பூமியையும் விண்வெளியில் இருந்து கொண்டே புகைப்படம் எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் விண்ணில் இருந்து எடுத்த பூமியை சுற்றியுள்ள மேகக்கூட்டங்களின் புகைப்படங்களை கடந்த 1ஆம் தேதி இணையதளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.

Categories

Tech |