மாணவியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடியில் இசக்கியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் நாங்குநேரியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி இசக்கியப்பன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு மாணவி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மாணவியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் மாணவிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதால் அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்து பார்த்தபோது அவர் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. சிறிது நேரத்தில் மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இசக்கியப்பனை கைது செய்தனர்.