Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மோட்டார் சைக்கிள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிள் திருடிய குற்றத்திற்காக 2 வாலிபர்கள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தமாடிப்பட்டி பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார்.  இந்நிலையில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த வினோத்குமார் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் நந்தவனப்பட்டி பாலம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் ராஜா மற்றும் வசந்த் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வினோத்குமாருக்கு சொந்தமானது. இதனை அடுத்து 2  பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |