சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆரணி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அருணகிரிசத்திரம் பகுதியில் வசிக்கும் நந்தகுமார் என்பதும், மேலும் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நந்தகுமாரை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.