தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிராஞ்சேரியில் பகுதியில் வேல்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் தச்சநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வேல்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.