75-வது சுதந்திரதின அமுத பெருவிழா கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கூடுதல் வளாகத்தில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், மணிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவப் படங்கள், பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் போன்றவைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
இதை மாணவர்களும், பொதுமக்களும் எளிதில் பார்த்து புரிந்து கொள்ளும் விதமாக வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் போலீஸ் சூப்பிரண்டு விஜய கார்த்திக் ராஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் இந்திரா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.