பீஸ்ட் திரைப்படம் குறித்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
பிரபல இயக்குனரான நெல்சன் திலீப்குமார் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வருகின்றார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் அடுத்த வாரம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இந்நிலையில் இத்திரைப்படம் குறித்த தகவல்கள் சிலவற்றை நெல்சன் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, இந்த படத்தின் கதையை முழுக்க முழுக்க விஜய்யை நினைத்து எழுதினாராம். இயக்குனராக இல்லாமல் ஒரு ரசிகராக இருந்து ஹீரோவை எப்படி பார்க்க ஆசைப்படுவோமோ அதுபோல விஜய்யை நினைத்துக்கொண்டு இந்த கதையை எழுதினாராம். ஒருவேளை திரைப்படத்தில் விஜய் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இந்த படத்தை இயக்கி இருக்க மாட்டாராம். காரணம் ஒவ்வொரு காட்சியையும் விஜய்க்காக பாத்து பாத்து எழுதினாராம். அதனால் வேறு ஒருவரை ஹீரோவாக நடிக்க வைக்க முடியாதாம் என கூறியுள்ளார்.