திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் குறைகளை தீர்க்கும் கூட்டம் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர். இதில் நெல்லை அருகே நாரணம்மாள்புரத்தை சேர்ந்த செல்லப்பா (விவசாயி) மற்றும் அவரது மனைவி மரியபுஷ்பம் இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்திருந்தனர். இந்நிலையில் செல்லப்பா தான் கொண்டுவந்த பையில் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடம்பில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
உடனே அருகிலிருந்த காவல்துறையினர் அதை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். பின்னர் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன என்று விசாரித்த போது தனக்கு சொந்தமான நிலத்தை வேறொருவர் போலி ஆவணங்கள் தயாரித்து விற்று விட்டதாக கூறினார். இது தொடர்பாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன் என்று செல்லப்பா கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.