Categories
அரசியல்

“இதுதாங்க அவர் தைரியம்”… துரை வைகோ வார்னிங்…!!!!

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக கடந்த ஒன்றாம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட 25 மாநகராட்சிகளில் சொத்து வரி 25 சதவிகிதம் முதல் 150 சதவீதம் உயர்த்தப்படுவதாக அரசாணையில் கூறப்பட்டிருந்தது. இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது.

மேலும் திமுக கட்சியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் சொத்துவரி உயர்த்திய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள  மதிமுக கட்சி சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் தலைமை நிலைய செயலர் வைகோ கூறியபோது, மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தி கொண்டிருக்கிறது. இது சாதாரண மற்றும் நடுத்தர மக்களை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

மக்கள் விரோதப் போக்கில் தொடர்ந்து ஈடுபட்டால் ஆட்சியில் தொடர்ந்து இருக்க முடியாது. மேலும் அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது பலர் பாதிக்கப்படுகிறார்கள். இதனை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பரிசீலனை செய்வார். மேலும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உரிய ஆதாரம் இல்லாமல் தமிழக முதல்வரின் பயணங்களை விமர்சித்திருக்கிறார்.

இது ஆரோக்கியமான விமர்சனமும் இல்லை எனவும் அவர் பாஜக தலைவராக பதவியேற்ற தனது கட்சியை வளர்ப்பதற்கு ஏராளமான விமர்சனங்களை கூறிவருகிறார். என்னை கைது செய்யுங்கள் என தெரிவித்துவிட்டு ஒய் பிரிவு பாதுகாப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார். இதுதான் அவர் தைரியம் இந்த அரசாங்கம் இலங்கைக்கு தற்போதைய நிதி இழப்பு சூழ்நிலையில் நிதி உதவி வழங்க உதவியிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு இலங்கையிடம் இந்திய மீனவர்களை பாதுகாப்பதற்கான குறைந்தபட்ச ஓப்பந்த விதிமுறைகளை  மத்திய அரசு இலங்கையிடம் கூற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |