பிரிட்டனில் கடந்த 1982ஆம் ஆண்டு ‘சேனல் 4’ என்ற தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. மக்களை மகிழ்விக்கும் விதமான நிகழ்ச்சிகளை அரசு சார்பில் வழங்குவதற்காக பிரிட்டன் அரசாங்கம் இந்த தொலைக்காட்சியை தொடங்கியது. விளம்பர வருவாய் மற்றும் மக்களின் வரிப்பணம் போன்றவற்றைக் கொண்டு இந்த சேனல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த சேனலை விற்பனை செய்ய உள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
இதற்கு தொலைக்காட்சி ஊழியர்களும் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் பிரிட்டன் அரசோ, நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்களின் மத்தியில் இன்று சேனல் பின்னடைவை சந்தித்து வருவதாகவும் இதனை தனியார் வசம் ஒப்படைக்கும் பட்சத்தில் அவர்கள் காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பாக செயலாற்றுவார்கள் எனவும் கூறுகிறது. எனினும் இந்த சேனலை செய்வதற்கு தொடர் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.