Categories
சினிமா

நானே ‘அவரோட’ பெரிய ரசிகர்தான்…வெளியான பிரபல பாலிவுட் நடிகரின் பேட்டி…!!!

தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களான விஜய் மற்றும் யாஷ் படங்களுக்கு போட்டியாக ஜெர்ஸி படமானது வெளியாக உள்ளது.

பாலிவுட் நடிகர்களில் பிரபலமானவர் ஷாகித் கபூர். இவர் கவுதம் தின்னானூரி  இயக்கத்தில் நடித்துள்ள படம் ஜெர்ஸி. இந்த படமானது கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்நிலையில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களான விஜய் மற்றும் யாஷ் படங்களுக்கு போட்டியாக ஜெர்ஸி படமானது வெளியாக உள்ளது. இந்நிலையில் வருகின்ற 13 ஆம் தேதி அன்று விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆகிறது. அதற்கு அடுத்த நாளே யாஷின் கேஜி எஃப் 2 படமானது வெளியாகவுள்ளது.

இதையடுத்து இந்த இரு மாஸ் ஹீரோக்களின் படங்கள் ரிலீசாகும் நிலையில், அந்த படத்திற்கு போட்டியாக மோதுகின்ற வகையில் ஜெர்ஸி படமானது, வருகின்ற 14ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் 2 ட்ரைலர்கள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகளில் சூறாவளியை போன்று நடிகர் ஷாகித் கபூர் சுழன்று கொண்டிருக்கிறார். இதையடுத்து  இப்படத்தினை பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ஷாகித் கபூர் கூறியுள்ளதாவது, பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் படங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் க்ளாஷ் ஆகாதா  என்ற கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அதாவது தனக்கு நடிகர் விஜய்யை ரொம்ப பிடிக்கும் எனவும், தான் அவரின் பெரிய ரசிகர் என்றும் அவருடைய படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். மேலும் பீஸ்ட்  அற்புதமான படமாக இருக்கும் என நான் நம்புகிறேன். ஆனால் அது ஒரு வித்தியாசமான மார்க்கெட் எனக் கூறினார். அதனால் அது ஓவர்லாப் ஆகாது என நினைக்கிறேன். இவ்வாறு நடிகர் ஷாகித் கபூர் கூறியுள்ளார்.

Categories

Tech |