பயனாளர்களின் நகைகள் 150 மில்லி கூடுதலாக உள்ளதால், அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்க முடியாது என சின்னசேலம் எலவடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசானது பொது மக்களின் நலனுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் நகைகடனுக்காக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்திற்காக 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
அவ்வாறு போலி நகைகளை வைத்து கடன் வாங்குதல் மற்றும் ஒரே நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிகளில் கடன் வாங்குதல் போன்ற பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதை கருத்தில் கொண்டு தகுதியான நபர்களை மட்டும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நகை கடனுக்காக விண்ணப்பித்தவர்களில் 48 லட்சத்திற்கு மேற்பட்ட பேருக்கு மட்டுமே கடனானது தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பல இடங்களில் நகையும்,சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்நது தள்ளுபடி பெறத் தகுதியானவர்கள், தகுதியற்றவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிட்டுள்ளது.அதில் நிபந்தனைகளின் படி இதில் சின்னசேலம் எலவடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் பெற தகுதியான நபர்களுக்கு அவர்களின் நகைகள் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து இதில் 177 பயனாளிகளுக்கு தள்ளுபடி பெற தகுதியான நபர்கள் என பட்டியல் வெளியிடப்பட்டநிலையில் , தற்போது இதில் 15க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய செயலர் மறுப்பு தெரிவித்ததாக கூறியுள்ளனர்.இதனால் பயனாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க செயலாளர் கூறியுள்ளதாவது, நிராகரிக்கப்பட்ட பயனாளர்களின் நகைகள் 150 மில்லி கூடுதலாக உள்ளதால், அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.