முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாகராஜன் நகரில் பிரசித்தி பெற்ற முத்தெடுத்த முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அண்ணா சிலை அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம், தீச்சட்டி, எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக வந்து முத்து மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். அதன்பின்னர் அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களைக கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.