Categories
உலக செய்திகள்

இங்கும் கூட பொருளாதார நெருக்கடி…. பதவியில் இருந்து விலகிய குவைத் அரசு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

குவைத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருவதால் அரசு பதவியில் இருந்து விலகியது.

2019ஆம் ஆண்டு குவைத்தில் முதல் பிரதமராக இருந்தவர் ஷேக் சபா கலீத் அல் ஹமத் அல் சபா. இதற்கிடையில் குவைத்தில் கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் பிரதமர் ஷேக் சபா தனது பதவியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து தேர்தல் முடிந்த பிறகு புதிய அரசு பதவியேற்றதும் அரசர் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் அல் சபா மீண்டும் பிரதமராக ஷேக் சபா நியமித்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நடைபெற்ற தேர்தலில் முடிவுகள் பிரதிபலிக்கவில்லை என்றும் சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினர்களை தேர்வு செய்வதில் அரசு தலையிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்பும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு 30க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அதற்கு ஆதரவளித்தனர். இதனால் நாடாளுமன்றதில் குழப்பம் ஏற்பட்டு பொருளாதார சிக்கலில் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு சொத்துக்கள் கடன் பிரச்சினை காரணமாக விற்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த விவகாரத்தில் பிரதமர் தலைமையிலான புதிய அமைச்சரவை அனைவரும் சேர்ந்து ராஜினாமா கடிதத்தை அரசர் ஷேக் நவாப்பிடம் கொடுத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அரசு மீது கொண்டு வரும் நிலையில் ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஒன்றரை வருடத்தில் குவைத்தில் அரசு ராஜினாமா செய்தது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் பொருளாதார நெருக்கடியால் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் குவைத்திலும் இதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதால் அரசு ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |