ஷுதைதா துறைமுகத்திற்கு வர 31 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டப்பட்டுள்ளது.
மேயனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் படையினர் இருவருக்கும் இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வருவதை தொடர்ந்து பல மாதங்களுக்குப் பின் அந்த நாட்டின் ஷுதைதா துறைமுகத்திற்கு முதன்முறையாக எண்ணெய் கப்பல் திங்கள்கிழமை வந்து சேர்ந்துள்ளது. மேயனில் தலைநகர் சனா போன்ற பகுதிகளை மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளிடம் இருந்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு கைப்பற்றியுள்ளனர்.
அவர்களுக்கு ஈரான் அரசு உதவிகளை அளித்து வருவதாக கூறியுள்ளது. எனினும் மண்சூர் ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்கு பகுதிக்கு ஈரான் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதை தடுப்பதற்காக, கடல் மற்றும் வான்வழிப் போக்குவரத்து தடையை சவுதி கூட்டுப்படை அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக எண்ணெய் கப்பல்கள் வருவது தடைபட்டு இருப்பதால் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் கடும் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இந்தநிலையில் ஐநா மேற்பார்வையாளர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஹூதி கிளர்ச்சியாளர்களும் அரசுப் படையினருக்கும் இடையே இரண்டு மாத சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த ஒப்பந்தம் சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இதனை அடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஷுதைதா துறைமுகத்திற்கு முதன்முறையாக எண்ணெய் கப்பல் செவ்வாய்க்கிழமை வந்து சேர்ந்ததாக மெயின் பெட்ரோலிய நிறுவனம் கூறியுள்ளது. அந்தக் கப்பல் இந்த துறைமுகத்திற்கு வர 31 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு கூறியுள்ளது.