Categories
தேசிய செய்திகள்

“மக்கள்தொகை கணக்கெடுப்பு”…. இனி இந்த வாய்ப்பும் உண்டு…. நித்யானந்த் ராய் வெளியிட்ட தகவல்…..!!!!!

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் பதில் கூறினார். அதாவது, அவர் கூறியதாவது “நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி சென்ற 2020ஆம் வருடம் ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை நடப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக அது தள்ளி போடப்பட்டது.

இதனால் இன்னும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தேதி முடிவு செய்யப்படவில்லை. முதன் முறையாக இந்த கணக்கெடுப்பு மின்னணு முறையில் நடத்தப்படுகிறது. இவற்றில் மக்கள் தாங்களாகவே மக்கள்தொகை விபரங்களை சேர்ப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

Categories

Tech |