தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான சொத்து வரியை கடந்த 1 ஆம் தேதி முதல் தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இந்த சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி சொத்து வரி உயர்வை கண்டித்தும்,வரி உயர்வை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்நடத்தியது.அதன்படி சென்னையில்நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை ஏற்றார். அதனைப்போலவே கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்தினார்.
இந்நிலையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து விருதுநகரில் ராஜேந்திர பாலாஜியின் தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. இங்கு இருப்பதே பெருமை. அதிமுகவை விட்டு போவது சிறுமையை தான் கொடுக்கும். எனவே சென்றவர்களை நினைத்து கவலைப்பட வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.