முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கருங்கல் அருகே மாதாபுரம் ஆனியன்விளை பகுதியில் மேரிடயனேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதனால் கல்லறை தோட்டம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கருங்கல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மேரிடயனேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.