அ.தி.மு.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அ.தி.மு.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும் எனவும், தேர்தலில் தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத் திட்டங்களை தடுத்து நிறுத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட கிழக்கு செயலாளர் எஸ்.ஏ அசோகன் தலைமை தாங்கினார். இந்தப் போராட்டத்தை தளமாய் சுந்தரம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். இவர் கடந்த ஆட்சியில் சொத்து வரியை உயர்த்தப்பட்டது.
அப்போது மக்களின் சொத்துக்களை அரசு பறிக்கிறது என்று குற்றம் சாட்டினார்கள். தற்போது தி.மு.க அரசு 150% சொத்து வரியை உயர்த்தி உள்ளது. இப்போது சொத்துக்களை யார் பறிக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரிந்திருக்கும். இதற்கான பதிலடி வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவுக்கு கிடைக்கும். இதனையடுத்து நாகர்கோவில் மாநகராட்சியில் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக இருக்கிறது. இதுவரை எந்த ஒரு சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இங்கு குடிநீர் 15 நாள்களுக்கு ஒருமுறை வருகிறது. இதை சரி செய்ய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினார். இந்தப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன், பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்