மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வாஞ்சூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சிமென்ட் சாலை பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி, அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பணிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் தற்போது 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கும் சிமெண்ட் சாலையின் தரம், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பணிகள் நடைபெறுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.