டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடிய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிதேர்வு 2022-ஆம் வருடத்திற்கான ஆன்லைன் பதிவானது துவங்கியது. ஆகவே தேர்வெழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி-ன் அதிகாரப்பூர்வ தளமான tnpsc.gov.in வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசின் பலதுறைகளுக்கு தேவையான ஊழியர்களை, டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தேர்வு செய்து வருகிறது. இதற்கிடையில் திறமையான ஊழியர்களை கண்டறிய பல போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் போன்றவற்றை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் தேர்வு 2022-ம் வருடத்துக்கான ஆன்லைன் பதிவு செயல்முறை ஏப்ரல் 4- 2022 அன்று தொடங்கி உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 3 ஆகும். இதில் பொறியியல் பட்டதாரிகளுக்கான ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வானது ஜூன் 26, 2022 அன்று நடத்தப்படும். தாள் I காலை 9.30 மணிமுதல் 12.30 மணி வரையிலும், தாள் II பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடத்தப்படும். இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையின் வாயிலாக நிறுவனத்தில் மொத்தம் 625 பணியிடங்களானது நிரப்பப்படும். காலியிட விபரங்கள், தகுதி, தேர்வு செயல்முறை மற்றும் பிற விபரங்களை குறித்து பார்க்கலாம்.
காலியிடம்
# ஆட்டோமொபைல் இன்ஜினியர் – 4
# ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் – 8
# உதவி பொறியாளர் – 577
# உதவி இயக்குனர் – 18
# ஜெனரல் ஃபோர்மேன் – 7
# தொழில்நுட்ப உதவியாளர் – 11
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது பதிவுக் கட்டணமாக ரூபாய் 150 மற்றும் தேர்வுக கட்டணமாக ரூபாய் 200 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
முதலாவதாக விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in-ஐ பார்வையிட வேண்டும். அதன்பின் பதிவுசெய்து, பதிவு/உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க ‘New User’ என்பதனைக் கிளிக் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து முகப்பு பக்கத்துக்குத் திரும்பி ‘Apply Online’ என்பதற்குச் செல்ல வேண்டும். பின் நற்சான்றிதழ்களைப் பயன்படுத்தி உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். அடுத்து தேவையுள்ள ஆவணங்களை பதிவேற்றம் செய்து கட்டணம் செலுத்த வேண்டும். பின் படிவத்தை சமர்ப்பித்து எதிர்கால குறிப்புக்காக ஒரு பிரிண்ட்அவுட் எடுக்க வேண்டும். இல்லையென்றால் இங்கே கிளிக் செய்வதன் வாயிலாக ஆன்லைன் விண்ணப்பத்திற்கான நேரடி இணைப்பை பெறலாம்.