காவல் துறையினரால் தேடப்பட்ட வாலிபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கம் கண்ணகி தெருவில் வசித்து வருபவர் மணி என்பவருடைய மகன் சுரேந்தர் என்ற பகவதி சுரேந்தர்(35). இவர் மீது தாலுக்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2016 ஆம் வருடம் நாடு வெடிகுண்டு வீசிய கொலை வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. மேலும் விழுப்புரம் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2012ஆம் வருடம் ஒரு கொலை முயற்சி வழக்கும், 2015 ஆம் ஆண்டு வருடம் ஒரு கொலை வழக்கும் பதிவாகியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சுரேந்தர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ள நிலையில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சுரேந்தரை கைதுசெய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில் காவல்துறையினர் சுரேந்தரை பல இடங்களில் வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் தன்னை தேடுவதை அறிந்து சுரேந்தர் நேற்று முன்தினம் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.