Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மோதிய சரக்கு வாகனம்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. போராட்டத்தில் இறங்கிய மக்கள்….!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அரியலூர் மாவட்டத்திலுள்ள காமரசவல்லி கிராமத்தில் வசித்து வந்தவர் விடுதலைமணி. இவர் அவரது நண்பர் பழனிவேல்ராஜன் என்பவருடன் தனது மோட்டார்  சைக்கிளில் ஏலாக்குறிச்சி சென்றுள்ளார். அப்போது அதே சாலையில் எதிரே சரக்கு ஏற்றி வந்த வாகனம் இவர்களது மோட்டார் சைக்கிளின் மீது  மோதியுள்ளது.இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விடுதலைமணி சம்பவ இடத்திலேயே உயிரிழத்தர். அவரது நண்பர் பழனிவேல்ராஜன் தஞ்சையில்  உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து விபத்துக்கு காரணமான சரக்கு வேன் டிரைவரை கைது செய்ய கோரி அவரது பெற்றோர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்தூர் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட அவரது பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் சரக்கு வேன் டிரைவர் கைது செய்யப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியதையடுத்து விடுதலைமணியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

 

 

 

 

Categories

Tech |