Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல்…. “10 வருடம் சிறை” நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

காரில் 27 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்த நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் கண்டரக்கோட்டை சோதனை சாவடியில் கடந்த 2017 ஆம் ஆண்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வேகமாக வந்த சந்தேகத்துக்குரிய காரை போலீசார் நிறுத்தியுள்ளனர்.ஆனால் அந்த கார் போலீசார்  தடுத்ததையும்  மீறி நிற்காமல் சென்றுள்ளது.

இதனால்  காரை வழி மறித்த போலீசார் பண்ருட்டியிலுள்ள காவல்துறையினருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.அந்த தகவலின் பேரில் பண்ருட்டி போலீசார் விரைந்தனர். அப்போது காரை நிறுத்திவிட்டு அங்குள்ள மறைவான இடத்தில் 27 கிலோ கஞ்சா பொட்டலங்களை காரில் வந்த நபர் மற்றும்  ஓட்டுனர்  சேர்ந்து பதுக்கி கொண்டு இருந்துள்ளனர்.

இதைக்கண்ட அங்கு சென்ற பண்ருட்டி போலீசார் அந்த 2 பேரையும் மடக்கிப் பிடித்துள்ளனர்.அந்த இருவரையும் பிடித்து விசாரித்ததில் கஞ்சா கடத்திய இருவரும் தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூரை சேர்ந்த 40 வயதான மலைச்சாமி என்பவரும் மற்றொருவர் கார் ஓட்டுனரான கும்பகோணத்தை சேர்ந்த சிங்காரம் என்பதும் தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் ஆந்திராவிலிருந்து ரயிலில் கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்து  தஞ்சாவூருக்கு சென்று அந்த பகுதியில்  விற்பனை செய்ய இருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் மலைச்சாமி சிங்காரம் ஆகிய 2 பேரையும் பண்ருட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.

அதன்பின் இந்த வழக்கு விழுப்புரத்திலுள்ள போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துறையினரின் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த போலீசார் விசாரணை நடத்தி 2 நபர்கள் மீதும் விழுப்புரம் போதை மருந்துகள் மற்றும் சட்ட வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திதில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கின் சாட்சிகளை விசாரித்து முடிந்ததால் நேற்று அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த வகையில்  விசாரித்த நீதிபதி கஞ்சா கடத்தி வந்த மலைசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் .மேலும் கார் ஓட்டுநரான சிங்காரத்தை வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சிறைதண்டனை விதித்த மலைசாமியை கடலூர் மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்துள்ளனர்.

Categories

Tech |