பிரிட்டனை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்ற போது, தந்தை மற்றும் மகன் பாறைச்சரிவில் மாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரிட்டனிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு 5 பேர் கொண்ட குடும்பத்தினர் சுற்றுலா வந்துள்ளனர். அப்போது, ப்ளூ மவுண்டன்ஸ் தேசிய பூங்காவில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் நடைபாதையில் சென்று கொண்டிருந்த அந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு நபரும் அவரின் 9 வயது மகனும் பாறைச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், அதே குடும்பத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் மற்றும் 14 வயது சிறுவன் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.