ரஷ்யா, உக்ரைன் நாட்டில் மேற்கொள்ளும் போர்க்குற்றங்களின் ஆதாரங்களை அழிக்க சூழ்ச்சி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டில் உள்ள Bucha நகரத்தில் ரஷ்ய படையினர் மக்களை கண்மூடித்தனமாக தாக்கி கொலை செய்திருக்கிறார்கள். மேலும், வயது வரம்பின்றி பெண்களை, அவர்களது குடும்பத்தார் முன்னிலையிலேயே பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் சடலத்தில் வெடிகுண்டுகளை கட்டி, குழிகளில் தூக்கி வீசியிருக்கிறார்கள்.
மேலும், பல கொடூர செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். ரஷ்யா இதற்கு பதில் அளித்தே தீரவேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தி வருகிறது. எனவே, அவர்கள் விசாரணை ஆணையங்களுக்கு முன் நிறுத்தப்படுவார்கள் என்பதற்காக ரஷ்ய அரசு குற்றங்களை செய்தவர்களை கொலை செய்ய தீர்மானித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
அதாவது, Bucha நகரத்தில் கொடூர செயல்களை செய்த ரஷ்ய படையினர்கள் தற்போது ரஷ்யாவிற்கு சென்றிருக்கிறார்கள். அவர்களை மீண்டும் உக்ரைன் நாட்டிற்கு அனுப்பினால் போரில் அவர்கள் உயிரிழந்து விடுவார்கள். அதன் பிறகு, அவர்கள் செய்த குற்றங்களுக்காக விசாரணை ஆணையங்களில் நிறுத்தி வைக்கப்பட மாட்டார்கள் என்று ரஷ்ய அரசு சூழ்ச்சி செய்திருக்கிறது.