Categories
உலக செய்திகள்

உக்ரைன்: குழந்தைகள் கண்ணெதிரே தாய்மார்களுக்கு நடந்த கொடூரம்…. வெளியான அதிர்ச்சி தகவல்……!!!!!

உக்ரைனில் குழந்தைகள் கண்முன்னே தாயார்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிறார்கள் என்ற தகவலை நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி முதன் முறையாக வெளியிட்டுள்ளார்.

உக்ரைனில்-ரஷ்யா இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், புச்சா நகரில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களை ரஷ்ய ராணுவம் சித்திரவதை செய்து கொலை செய்து உள்ளதாக பல குற்றசாட்டுகளை உலகநாடுகள் முன்வைத்து வருகிறது. ரஷ்யபடையினரால் உக்ரைன் பெண்கள், சிறுமிகள் சீரழிக்கப்படுகிறார்கள் என்ற தகவலும் வரும் சூழலில், அது தொடர்பாக அதிபர் ஜெலன்ஸ்கி இதுவரை பேசாமல் இருந்தார். இந்த நிலையில் முதன் முறையாக ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது, உக்ரைனிய தாய்மார்களை அவர்களின் குழந்தைகள் முன்னிலையில் ரஷ்ய துருப்புக்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

ஆகவே விளாடிமிர் புடினை போர்க் குற்றவாளி என்று ஐக்கியநாடுகள் சபை தெரிவிக்க வேண்டும். பல்வேறு குடும்பங்களை முழுமையாக ரஷ்யவீரர்கள் கொன்று எரிக்க முயற்சி செய்துள்ளனர். மேலும் கொள்ளை செயல்களிலும் ஈடுபட்டு உள்ளனர். அத்துடன் குடிமக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர், கை கால்கள் வெட்டப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு நரக வேதனையை அனுபவித்தனர். அதுமட்டிமின்றி பல பேரின் நாக்குகள் வெட்டப்பட்டது, ஏனென்றால் அவர்கள் பேசுவதை ரஷ்யவீரர்கள் கேட்க விரும்பவில்லை. புச்சாவில் மேற்கொள்ளப்பட்ட கொடுமைகள் பனிப்பாறையின் நுனி மட்டுமே என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |