Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய மாநில கல்வி கொள்கை…. அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய அதிரடி….!!!

பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக சிறந்த மாநில கல்வி கொள்கை தமிழகத்திலும் உருவாக்கப்படும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது. “மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஆரம்பத்திலிருந்து தவிர்த்து வருகிறோம். அதன் தாக்கம் தமிழகத்தில் இருந்து விடக் கூடாது என்பதற்காக தான் பிரத்தியோக மாநில கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது. அதனால் தேசிய கல்வி கொள்கை சார்ந்த மாநிலங்களுக்கு கல்விக் கொள்கை தேவை இல்லை.

தமிழக அரசு அமைந்துள்ள கல்விக் கொள்கையின் வடிவமைப்பு குழுவில் சிறந்த வல்லுநர்கள் உள்ளனர். அவர்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக கல்விக் கொள்கையை சிறந்த மாநிலமாக இக்குழு உருவாக்கும். மேலும் தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக உள்ளது. எனவே நம்மிடம் தேசி கல்வி கொள்கையை புகுத்துவது தவறு. இதனைத் தொடர்ந்து மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு டெல்லியை போன்ற நமது அரசு பள்ளிகளிலும் உட்கட்டமைப்பு மேம்படுத்தினால் தான் முடியும். இந்நிலையில்  அங்கு 1,1௦௦ பள்ளிகள் மட்டுமே இருக்கிறது ஆனால் தமிழகத்தில் 36,௦௦௦ பள்ளிகள் உள்ளன. எனவே இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இதனைத் தொடர்ந்து நமது பள்ளிகளை பார்வையிட ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தமிழகம் வருகிறார். அவரிடம் கருத்துக்கள் கேட்டு அறியப்படும். இதற்கிடையில்  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்னும் சில பாடங்கள் நடத்தப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நடத்தப்படாத பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்பது முறையானதாக இருக்காது. இதனை கண்டிப்பாக கவனத்தில் கொள்வோம் என்று கூறினார்.

Categories

Tech |