மாநிலங்கள்அவையில் பட்டயகணக்காளர், செலவுகள் மற்றும் பணிகணக்காளர்கள், கம்பெனி செயலாளர்கள் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா 106 உட்பிரிவுகளை கொண்டது. இதில் ஒவ்வொரு உட்பிரிவுக்கும் ஒப்புதல் பெறும் அடிப்படையில் ஒவ்வொரு உட்பிரிவையும், அதற்கு உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்களையும் குரல் வாக்கெடுப்புக்கு விட்டனர். இதனிடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் மட்டும் திருத்தங்களுக்காக 163நோட்டீஸ்கள் கொடுத்து இருந்தார். ஏராளமான திருத்தங்களை அவர் முன்வைத்தார்.
இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் பினாய் விஸ்வமும் ஒருசில திருத்தங்களை கொண்டு வந்தார். ஆகவே உட்பிரிவுகள், திருத்தங்கள் என 200க்கு அதிகமாக குரல்வாக்கெடுப்பு நடத்தி மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு 30 நிமிடத்திற்கு மேல் ஆகியது. இதற்கிடையில் ஒவ்வொரு உட்பிரிவையும், திருத்தங்களையும் வாசித்து வாசித்து சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் களைத்துபோனார். வெகு நாட்களுக்கு பின் பெரும்பாலான உட்பிரிவுகளை கொண்ட மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளதாக மாநிலங்களவை செயலகம் தெரிவித்தது.