மொபட்டுகளில் மணல் கடத்தி தப்பியோடிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள தா.பழூர் கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதியன்று அருகிலுள்ள தா.பழூர் பாலசுந்தரபுரம் பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டுள்ளர். அப்போது சிலர் மொபட்டுகளில் மணல் கடத்தி மூட்டைகளில் கொண்டு வந்துள்ளனர். மூட்டைகளை கொண்டு வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர் விசாரணை செய்ய முயன்றபோது கடத்தி வந்த மணல் மூட்டைகள் மட்டும் மொபட்களைஅங்கே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் தாதம்பேட்டை காலனி தெருவில் வசித்து வரும் சசிகுமார் உள்பட 5 பேர் மணல் மூட்டைகளை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. தலைமறைவாகி உள்ள அவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று காமராஜ் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.