Categories
அரசியல்

12-வது வாரியத்தின் இடைநிலைத் தேர்வு….. மாநில அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!!

UP போட்டித் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

UP போர்டு 12-வது வாரியத்தின் தேர்வு தாளை அதிகாரபூர்வமாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதை https://upmsp.edu.in/. என்ற இணையதளத்தின் மூலமாக பார்க்கலாம். UP வாரியத்தின் 12-வது கால அட்டவணையின்படி வாரியத்தின் ஆண்டு தேர்வுகள் மார்ச் 24-ஆம் தேதி முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி வரை நடைபெறும். இதனையடுத்து இன்டெர் கல்லூரிகளுக்கான தேர்வுகள் 15 நாட்களில் முடிவடையும் என்று உபி வாரியத்தின் தலைவர் மற்றும் இயக்குனரான வினை குமார் பாண்டே தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜில் இடைநிலை தேர்வுகளின் விரிவான கால அட்டவணையை மார்ச் 8-ஆம் தேதி அதிகாரிகள் அறிவித்தனர். இதற்கான தேர்வு அட்டவணை https://upmsp.edu.in என்ற இணையதளம் மூலமாகவும் பார்க்கலாம்.

இந்த வருடம் உபி வாரியத்தின் இடைநிலைத் தேர்வை  24,11,035 பேர் எழுதுகின்றனர். இந்தத் தேர்வுக்காக மொத்தம் 8,873 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது. இந்த இடைநிலை தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

மார்ச் 24  [ஹிந்தி/பொது ஹிந்தி]

மார்ச் 25 [இசை [குரல் மற்றும் கருவி] நடனம், குஜராத்தி, பங்காளா, மராத்தி, கன்னடம், மலையாளம், தமிழ், சிந்தி]

மார்ச் 26 [கணக்கியல், உருது, பஞ்சாபி]

மார்ச் 28 [புவியியல் மற்றும் வீட்டு அறிவியல்]

மார்ச் 29 [பொருளாதாரம், வணிகம், புவியியல் (பழைய பாடம்) தவிர வரைதல் மற்றும் கலை, பாலி, அரபு, பாரசீக [புதிய மற்றும் பழைய பாடத் திட்டங்கள்]

மார்ச் 30 [கணிதம் மற்றும் தொடக்கப் புள்ளியியல்]

மார்ச் 31 [வரலாறு]

ஏப்ரல் 4 [உளவியல்’ கல்வி’ உயிரியல்’ கணிதம்]

ஏப்ரல் 7 [பொருளாதாரம்’ இயற்பியல்]

ஏப்ரல் 9 [சமஸ்கிருதம்’ வேதியியல்’ சமூகவியல்]

ஏப்ரல் 11, 12 [சிவிக்ஸ்]

Categories

Tech |