தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருடந்தோறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. ஆனால் சென்ற 2 வருடங்களாக கொரோனா வைரஸ் தாக்கத்தால் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்போது கொரோனா தாக்கம் சீரடைந்து இருப்பதால் அதிகப்படியான தேர்வர்கள் எதிர்பார்த்து இருந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்சம் கல்வி தகுதி 10ம் வகுப்பு ஆகும். ஆகவே தகுதியானவர்கள் வயது வரம்பு, தேர்வு செயல்முறை என முழு விபரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குரூப் 4 காலிப்பணியிடங்கள்
# Village Administrative Officer (VAO) Office
# Junior Assistant (Non–Security)
# Junior Assistant (Security)
# Bill Collector Grade-I (Post Code:)
# Field Surveyor
# Draftsman
# Typist
# Steno-Typist (Grade–III) என்று மொத்தம் 7,382 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 7,382 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வில் 81 பணியிடங்கள் விளையாட்டு கோட்டா வாயிலாக நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 4 வயது வரம்பு
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் இருப்பவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும். அத்துடன் வயது தளர்வு குறித்த விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி
# விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனங்களில் உயர்நிலைப் படிப்புகளில் சேர்க்கை வழங்கக்கூடிய குறைந்தபட்சம் மதிப்பெண்களுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
# தட்டச்சர் மற்றும் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், தட்டச்சு எழுதுவதில் அரசு தொழில்நுட்பத் தேர்வில் தகுதி பெற்றிருக்கவும்.
# ஸ்டெனோ-டைப்பிஸ்ட் (கிரேடு – III) பதவிக்கு தட்டச்சு, சுருக்கெழுத்து ஆகிய இரண்டிலும் அரசு தொழில்நுட்பத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
# விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழி அறிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை
விண்ணப்பதார்கள் எழுத்துதேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். எழுத்து தேர்வுகள் ஜூலை 24-ம் தேதி காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற இருக்கிறது. அதன்பின் இந்த தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 4 Exam Pattern-தேர்வு மாதிரி
இந்த குரூப்- 4 தேர்வு 3 மணி நேரம் நடைபெற இருக்கிறது. இத்தேர்வில் 200 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். இதற்கு 1.5 மதிப்பெண்கள் வீதம் மொத்தமாக 300 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. 200 கேள்விகளில் 100 கேள்விகள் முழுவதும் தமிழில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 விண்ணப்பக் கட்டணம்
ஒரு முறை பதிவு கட்டணம் ரூபாய் 150- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). இதில் முன்பே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவுசெய்யத் தேவையில்லை.
#தேர்வுக் கட்டணம் ரூபாய் 100
TNPSC விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in எனும் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணியிடங்களுக்கு ஏப்ரல் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.