Categories
மாநில செய்திகள்

குழந்தை பாக்கியம் தரும் பழம்…. பிரசித்தி பெற்ற கோவிலின் பங்குனி பெருவிழா….!!!!

பிரசித்தி பெற்ற கோவிலின் பங்குனி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தகட்டூர் கிராமத்தில் புகழ்பெற்ற  மாப்பிள்ளை வீரன் திருமேனி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்தக் கோவிலின் 10 நாள் திருவிழாவாக பங்குனி பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் இறுதி நாளான இன்று பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இங்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக மண் குதிரைகள், சிறிய மனித உருவச் சிலைகள் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தினார்கள்.

அதன்பிறகு காணிக்கை செலுத்திய இடத்தில் பக்தர்கள் வாழைப்பழத்தை கொண்டுவந்து வைப்பார்கள். இந்த இடத்தில் வைத்து கோயில் பூசாரிகள் வாழைப்பழங்களை வீசுவார்கள். இந்த பழங்களை பக்தர்கள் குடைகள் மற்றும் கூடைகளை கொண்டு பிடிப்பார்கள். இந்த பழத்தை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது மக்களின் நீண்டகால நம்பிக்கையாக இருக்கிறது.

Categories

Tech |