தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தென்கிழக்கு -தென்மேற்குகடல் பகுதியில் மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
Categories