Categories
மாநில செய்திகள்

உணவுப் பிரியர்களே உஷார்…. பயோடீசல் ஆக மாறும் உணவக எண்ணெய்கள்… புதிய திட்டம் அறிமுகம்…!!!!

உணவகங்களில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணையை பயோடீசல் ஆக மாற்றும் பணியை திருப்பூர் உணவு பாதுகாப்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாவட்டத்திலுள்ள உணவு பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணையை மீண்டும் சமையலுக்கு பயன்படுத்துவது கூடாது இதை மீறும் உணவகங்கள் மற்றும் மனிதர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதனை கண்காணிக்கவும் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை பெறவும் முகவர்களை உணவு பாதுகாப்பு துறை நியமித்திருக்கிறது. இந்த நிலையில் உணவகங்களில் உள்ள தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரித்து அதனை மறுசுழற்சி முறையில் பயோ டீசலை பயன்படுத்த வேண்டுமெனவும் உணவு பாதுகாப்பு அறிவுறுத்தியுள்ளது. பயன்படுத்தப்பட்ட எண்ணையை பெற்று பயோடீசல் ஆக மாற்றுவதற்கு ருகோ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கான முகவர்கள் இருக்கின்றனர். உயர்தர மற்றும்  நடுத்தர உணவகங்கள் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் சாலையோர உணவகங்கள் கோழி, மீன், இறைச்சி போன்றவற்றை பொரிக்கும் தள்ளுவண்டி கடைகள் துரித உணவகங்கள் போன்றவற்றை கணக்கெடுத்து சமையல் எண்ணெய் பயன்பாடு மீதமாகும் என்ணெய்  போன்றவற்றை கண்காணிக்கப்பட்டு முகவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் மாவட்ட ஓட்டல்  உரிமையாளர் சங்கங்கள், பேக்கரி உரிமையாளர் சங்கங்கள் மூலமாக இந்த திட்டத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் இதுவரை 46858 லிட்டர் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை சேகரித்து பயோ டீசல் ஆக தயார் செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு என்ணெய்  கொடுப்பதால் மக்களுக்கு உடல் உபாதைகள் மற்றும் நோய்கள் தடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணையை மீண்டும் சமையலுக்கு பயன்படுத்தும் கடைகளில் உணவு உண்பதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |