Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீட்டை காலி பண்ணுங்க…. மாட்டோம்… அந்த இடத்திற்கு பட்டா கொடுங்க… 86 குடும்பத்தினர் எதிர்ப்பு..!!

மேல்மலையனூர் அருகில் வீடுகளை அகற்ற 86 குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அந்த இடத்திற்கு பட்டா வழங்க கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல் மலையனூர் தாலுக்கா செவலபுரை குளக்கரை தெரு பகுதியில் வசித்து வரும் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஒரு கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் 60 வருடங்களுக்கு மேலாக 11 ஏக்கர் பரப்பளவில் 86 குடும்பத்தினர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றோம். மேலும் எங்கள் பகுதியில் பயன்படுத்தப்படாத சிறிய குளம் ஒன்று இருக்கிறது.

அந்த குளத்தில் 11 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை வருவாய் துறை கணக்கில் புறம்போக்கு என்று எழுதப்பட்டுள்ளது. இந்த 86 வீடுகளை சுற்றிலும் அங்கன்வாடி, சத்துணவு மைய கட்டிடங்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஊராட்சி மன்ற அலுவலகம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கிராம சேவை மைய கட்டிடம், திரவுபதி அம்மன் கோவில், நாடகமேடை இவை அனைத்தும் அமைந்துள்ளது.

மேலும் எங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு, சாலை வசதி, குடிநீர் வசதி அனைத்தும் ஊராட்சி செய்து கொடுத்துள்ள நிலையில் அதற்கு நாங்கள் வரியும் செலுத்தி வருகின்றோம். இந்த நிலையில் மேற்கண்ட 11 ஏக்கர் பரப்பளவில் உள்ள அனைத்து வீடுகளும் புறம்போக்கு நிலம் என்று தெரிவித்து எங்களது வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

எங்களுக்கு நாங்கள் குடியிருக்கும் வீட்டை தவிர வேறு வீடோ, நிலமோ இல்லை. ஆதலால் பயன்படுத்தப்படாத குளத்தை அதிகாரிகள் அளந்து ஒதுக்கிவிட்டு குடியிருந்த எங்களது இடத்தை நிலவகை மாற்றம் செய்து பட்டா கொடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த மனுவை பெற்ற அதிகாரிகள் இதுகுறித்து பரிசீலனை செய்வோம்  என்று தெரிவித்தார்கள்.

Categories

Tech |