உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் மனிதாபிமான உதவிகள் பெறுவதற்காக மக்கள் நீண்ட தூரம் வரிசையில் நிற்கும் ட்ரோன் காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இந்த நகரில் ரஷ்யாவின் தாக்குதல் நடைபெறுவதற்கு முன் நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்திருக்கின்றனர். ஆனால் தற்போது இந்த நகரம் முற்றிலுமாக அழிந்து போன நிலையில் இருக்கிறது.
மேலும் அங்கு வசிக்கும் மக்கள் உணவு, இருப்பிடம் குடிநீர் போன்ற எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் சிரமப்படுகின்றனர். அந்த நகரிலிருந்து வாகனங்கள் மூலம் வெளியேறும் வழிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருப்பதால் நடந்து சென்றால் மட்டுமே நகரில் இருந்து வெளியேறும் நிலை உள்ளதாக உக்ரைன் துணை பிரதமர் கூறியுள்ளார்.