மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவின் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் பட்டிருந்தது. இதனால் பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்ததன் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு அகவிலைப்படி உயர்வு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் குறையை தொடங்கியதன் காரணமாக அகவிலைப்படி உயர்வு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேலும் ஜனவரி 2020 ஒன்றில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 11% அதிகரிக்கப்பட்டது.
அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படியானது 17 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு மத்திய உள் துறை கட்டுப்பாட்டிலுள்ள புதுவை யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு இருந்தது. இதனை 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு ஏற்படும் ஏற்பட்டு தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி பெற்று வருகிறார்கள்.மேலும் இது கடந்த அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக தற்போது புதுவையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக நீதித்துறை சார்பு செயலாளர் கோவிந்தராஜன் அனைத்து துறை செயலர்கள், பிராந்திய தலைமைக்கும், துறைகளின் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில் தெரிவித்தாவது, புதுவையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இவர்களுக்கு 31% இருந்து 34 சதவீதமாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.