Categories
அரசியல்

பள்ளி கட்டிடங்களின் நிலைமை குறித்து கண்காணிக்க வேண்டும்….!!! அரசுக்கு ஜி.கே வாசன் அறிவுறுத்தல்…!!

நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி.கே வாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் மீது அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். மழை வெயில் என எந்த இயற்கை பேரிடருக்கு மத்தியிலும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் ஆசிரியர்களும் பள்ளி பணியாளர்களும் சரியாக பள்ளிக்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். நடப்பு கல்வியாண்டில் பள்ளிக்கூடங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள், சமையலறைகள், போன்றவை சரியான நிலைமையில் சீராக உள்ளதா என அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.

குறிப்பாக கட்டிடங்களின் நிலைமை குறித்து கண்காணிக்கவேண்டும். சமையலறை கட்டிடங்கள், கழிவறைகள் மற்றும் வகுப்பு கட்டிடங்கள் அனைத்தும் தரமானதாகவும் பழுதடையாமலும் இருக்கிறதா என கண்காணிப்பில் வைக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும் அவர்களுக்கு பள்ளிக்கு வருவதற்கான ஆர்வத்தை அதிகரிக்கவும் தங்களால் முடிந்த ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்ய வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |