கிழக்கு மற்றும் தெற்கு டெல்லியில் உள்ள மேயர்கள் நவராத்திரி தினங்களில் இறைச்சி கடைகளை திறக்க கூடாது என கூறிவருவது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. பாஜக மேயர்கள் டெல்லியில் உள்ள இறைச்சிக் கடைகளை நவராத்திரி சமயத்தில் திறக்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். இறைச்சி கடைகளில் இருந்து வரும் துர்நாற்றம் விரதத்தை கலைப்பதாக உள்ளதாகவும், இறைச்சி கழிவுகளை நாய்கள் தின்றுவிட்டு விரதம் இருப்பவர்களை அருவருக்கத்தக்க வகைகளில் செய்யும் எனவும் அவர்கள் ஏதேதோ காரணம் கூறி வருகின்றனர்.
இது தொடர்பாக இந்தியா டுடே நாளிதழ் புள்ளிவிபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி டெல்லியில் 75 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் இறைச்சி சாப்பிடுபவர்களாக உள்ளனர் என அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. இறைச்சி சாப்பிடக் கூடாது, இறைச்சி விற்க கூடாது என கூறுபவர்கள், இறைச்சி ஏற்றுமதி செய்யக் கூடாது என்று மட்டும் ஏன் கூறவில்லை என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து டன் கணக்கில் வெளிநாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.