Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மானியமாக வழங்கப்பட்ட மரக்கன்று…. மாவட்ட ஆட்சியரின் நேரடி ஆய்வு…!!

மாவட்ட ஆட்சியர் குளித்தலை ஊராட்சி பகுதிகளில் நடக்கும் பல்வேறு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். 

தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை திட்டம் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில்   கரூர் மாவட்டத்திலுள்ள  கீழ் குளித்தலை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாக ஒரு மரக்கன்றுக்கு ரூ.14 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு மானியமாக செம்மரம், தேக்கு மற்றும் மகோகனி போன்ற மரக்கன்றுகள் மானியமாக விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பராமரிப்பு செலவுக்கு ஒரு மரக்கன்று ரூ 7 வீதம் முதல் இரண்டு  வருடங்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குளித்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில்  வசித்து வரும் 52 விவசாயிகளுக்கு 33 ஆயிரத்து 220 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் வளையப்பட்டி   பகுதியை சேர்ந்த  விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் 700 மரக்கன்றுகளை சொட்டுநீர் பாசனம் மூலம் நட்டு வளர்த்து வந்துள்ளார்.

இதனையடுத்து குளித்தலை பகுதியை சுற்றியுள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெறும்  பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன்பின் மானியமாக   விவசாயிகளுக்கு அவ்வளவு  தொகை வழங்கப்படுகிறது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்  போது குளித்தலை வேளாண்மை உதவி இயக்குனர் அரவிந்தன்,  ஊராட்சி ஒன்றியம் ,வருவாய்த்துறை அதிகாரி உள்பட பலர் உடனிருந்தனர்.

Categories

Tech |