வேனில் கடத்தி வந்த 5 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் சந்தேகத்தின் பெயரில் மினி வேன் ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்து சந்தேகமடைந்த பொதுமக்கள் வேனை மடக்கி பிடித்துள்ளனர். அப்போது வேன் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புலனாய்வுத்துறை காவல்துறையினர் வேனில் இருந்த 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வேன் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இதுபோன்று வாகனத்தில் கடத்தி வந்தாள் வாகனத்தின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளார்.