வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதனையடுத்து கிருஷ்ணா படத்தில் உருவாகும் 10 தல படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் சிம்பு. கன்னடத்தில் நரகன் இயக்கத்தில் சிவராஜ்குமார் முரளி போன்றோர் பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழிலும் இயக்குனர் நரதனே இயக்கி வந்துள்ளார். இந்நிலையில் தமிழ் ரீமிக்ஸ் தாமதமாகியுள்ளது. கன்னடத்தில் இயக்கும் புதிய படம் ஒன்றை இயக்கி கமிட்டானார் இதனால் முஃப்தி இப்படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து படத்தின் மீதான பிரச்சினைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டு படத்தை இயக்க சில்லுனு ஒரு காதல் இயக்குனர் கிருஷ்ணா கமிட்டாகியுள்ளார். பத்து தலை என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், டிஜே மனுஷ்யபுத்திரன் போன்ற நடிக்கின்றனர்.
மிஸ்டர் லோக்கல் படத்தில் நடிக்க தனக்கு ரூபாய் 15 கோடி சம்பளம் என நிர்ணயித்து ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாகவும், ஆனால் ஞானவேல் ராஜா தனக்கு 11 கோடி மட்டுமே சம்பளம் தந்ததாகவும் மீதமுள்ள நான்கு கோடி ரூபாய் பாக்கியை தர தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். மேலும் கொடுக்க வேண்டிய சம்பளத்தை வழங்கும் வரை ஞானவேல்ராஜா சிம்பு மற்றும் விக்ரம் படங்களை தயாரிக்க கூடாது என தனது மனுவில் குறிப்பிட்டு கூறியுள்ளார். இதனால் சிம்பு மிகுந்த கோபத்தில் உள்ளாராம். அவருக்கு வேண்டிய சம்பளத்தை கேட்கிறது சரி என்னோட படத்தை தயாரிக்க கூடாது என்று எப்படி சொல்லலாம் என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம் சிம்பு.