Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம்…. 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பேருந்து நிலையம் மிகவும் பாழடைந்த நிலையில் இருக்கிறது. இங்குள்ள கட்டிடங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இந்தப் பேருந்து நிலையத்தை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை எடுத்து வருகின்றனர். இந்தப் பேருந்து நிலையத்தை தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார். அதன்பிறகு இவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் திருவட்டார் பேருந்து நிலையம் மிகவும் பாழடைந்து காணப்படுகிறது. எனவே நவீன முறையில் பேருந்து நிலையம் கட்டுவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக ரூபாய் 3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

இதனையடுத்து 3 விவசாயிகளுக்கு 15,52,599 ரூபாய் மதிப்பிலான வேளாண் கருவிகளை வழங்கினார். அதன்பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தில் தரிசு நிலங்களில் விவசாயம் செய்கின்றனர். இவர்களை ஊக்குவிக்கும் விதமாக காசோலை வழங்கப்பட்டது. அதன்படி கிருஷ்ணகுமார் என்பவருக்கு 15,000 ரூபாயும், மீனாட்சிசுந்தரம் என்பவருக்கு 10,000 ரூபாயும், பெர்லின் கோல்ட் என்பவருக்கு 5,000 ரூபாயும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேனீ வளர்ப்பு பயனாளிகள் 18 பேருக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 1,44,000 ரூபாய் ஆகும். மேலும் முதியோர்கள் மற்றும் விதவைகளுக்கு சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதன்பிறகு மாத்தூர் வழியாக திங்கள்நகர் செல்லும் பேருந்து சேவையை அமைச்சர் துவங்கி வைத்தார்.

Categories

Tech |