சாப்பிட்டு விட்டு தூங்கிய வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள அம்மன் நகரில் பெட் என்ற கவுதம்(28) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று மதியம் சாப்பிட்டு விட்டு வீதியில் தூங்கியுள்ளார். இதனையடுத்து வெகுநேரமாகியும் கவுதம் தூக்கத்தில் இருந்து எழாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம்பத்தினர் உடனடியாக கவுதமை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் கவுதம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கவுதமின் நண்பர்கள் அவர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.