Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரின் துபாய் பயணத்துக்கு… இபிஎஸ் தருகின்ற புதுவிளக்கம்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்று வந்த துபாய் பயணத்துக்கான காரணத்தை  இபிஎஸ் விளக்கியுள்ளார். 

திருச்சியில் உள்ள ரயில்வே ஜங்ஷன் முன்பு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சொத்துவரி 150% உயர்த்தியுள்ள, அதிமுக அரசை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர மற்றும் மாவட்ட அதிமுக சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் கொரோனாவினால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நேரத்தில் இந்த அரசு 150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி மக்களை மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது. இது கண்டனத்துக்குரியது என கூறியுள்ளார். மேலும் 10 மாதத்தில் நீங்கள் என்னென்ன திட்டத்தை கொண்டு வந்தீர்கள். நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை எல்லாம் ரிப்பன் கட்டிங் செய்து வருகிறீர்கள் என்றும் 10 மாதத்தில் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்கள் தான் என்ன என்று கூறியுள்ளார்.

மேலும் ஸ்டாலின் துபாய்க்கு இன்ப சுற்றுலா சென்று வந்துள்ளார் எனவும், திமுக கட்சி தொண்டர்கள் பணத்தில் ஏன் அரசு அதிகாரிகள் துபாய் செல்ல வேண்டும். துபாய் சர்வதேச கண்காட்சி 10வது மாதமே தொடங்கி விட்டநிலையில், கண்காட்சி முடிய 6 நாட்களே இருக்க நம் முதல்வர் சென்று அங்கு புதிய அரங்கை திறந்து வைத்துள்ளார். 10 மாதமாக கொள்ளை அடித்த பணத்தை வைத்து துபாயில் முதலீடு செய்யதான் ஸ்டாலின் அங்கு சென்று வந்துள்ளார் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. காவல் துறை செயலிழந்துவிட்டது. பெண்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. மின்வெட்டு இப்போதுதான் ஆரமித்துள்ளது. திராவிட மாடல் இதுதானா ? என்று கூறியுள்ளார். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் வந்தாலும் வரலாம். எனவே கிடைத்த வாய்பை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய பாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

Categories

Tech |