இந்திய அணியின் செல்லப்பிள்ளையாக வலம்வருபவர் சுழற்பந்துவீச்சாளர் சாஹல். இவர் களத்தில் செய்யும் சம்பவங்களை விட, களத்திற்கு வெளியே செய்யும் சம்பவங்கள் சமூக வலைதளங்களில் உடனடியாக வைரலாகிவிடும். இவரது சாஹல் டிவிக்காக தனி ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு போட்டி முடிவடைந்த பின்பும், இவரது சாஹல் டிவி பேட்டிகளுக்காகவே ரசிகர் பட்டாளங்கள் இருக்கிறது.
ஆனால் இப்போது இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் சாஹலை கலாய்த்துள்ளார். அந்த ட்விட்டில், ”ஹாலிவுட் நடிகரும், WWE வீரருமான ராக் (அ) டுவைன் ஜான்சனின் சட்டையில்லா புகைப்படத்தோடு சாஹல் சட்டையில்லாமல் இருக்கும் புகைப்படத்தை ஒப்பிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தோடு, இன்று நான் பார்த்த சிறந்த புகைப்படம் இதுதான். இந்திய அணி ஆச்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றுள்ளது. ஆனால் தலைப்பு செய்தியாக வேறு ஒன்று வரவுள்ளது” எனக் கலாய்த்துள்ளார்
இதற்கு சுழற்பந்துவீச்சாளர் சாஹல், ”தி ராக்” எனப் பதிவிட்டு சில ஸ்மைலிகளை பதிலாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
Best picture I saw today. India wins the series but someone else takes the headlines. Bravo!! @yuzi_chahal pic.twitter.com/dN0RXh05q9
— Rohit Sharma (@ImRo45) January 20, 2020