இந்திய அஞ்சல் துறை மற்றும் இந்திய ரயில்வே இணைந்து மேம்படுத்தப்பட்ட பார்சல் சேவையை உருவாக்கியுள்ளன. பார்சலை வாங்கும் இடத்திலும் பார்சலை கொடுக்கும் இடத்திலும் அஞ்சல்துறை சேவை செய்யும். பார்சலை ரயில் நிலையங்களுக்கு இடையே கொண்டு செல்லும் சேவையை ரயில்வே செய்யும்.இந்த திட்டத்தின் நோக்கம் வணிகர்களிடமிருந்து வணிகர்களுக்கு மற்றும் வணிகர்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு என்பதாகும். அதாவது அனுப்புகின்ற அவரின் இடத்தில் இருந்து கொண்டு சென்று பெறுகின்ற அவரின் இடத்தில் அளிப்பது. முன்னோட்ட அடிப்படையில் மார்ச் 31ஆம் தேதி சூரத் -வாரணாசி இடையே முதல் சேவை தொடங்கப்பட்டது என அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
Categories