பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல் காவல்துறையினரால் அழிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்பட்டி மலையை சுற்றியுள்ள பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் கரியாலூர் தனிப்பிரிவு காவல்துறையினர் கல்வராயன்மலை பகுதியை சுற்றி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கொடமாத்தி வனப்பகுதியில் பெரிய பேரல்கள் இருந்தது. அதனருகில் சென்று காவல்துறையினர் பார்த்தபோது பேரல்களில் சாராய ஊறல் இருந்தது. அதில் மொத்தம் 1,000 லிட்டர் இருந்தது. இதை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.