ஒருங்கிணைந்த சேவை மைய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலமாக நடத்தப்படுகிறது. இந்த மையத்தில் கூடுதலாக 6 பணியாளர்களை நியமிக்குமாறு சமூகநல இயக்குனர் அறிவித்துள்ளார். அதன்படி ஒருங்கிணைந்த சேவை மையங்களில் ஆலோசகர் பணிக்கு 4 காலியிடங்கள் உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் முதுகலை சமூகப்பணி மற்றும் சட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இதற்கு பெண்கள் ஆலோசனை மற்றும் மறுவாழ்வு அளித்தல் சேவையில் 3 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு ஊதியமாக ரூபாய் 15,000 வழங்கப்படும்.
இதனையடுத்து பாதுகாவலர் பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 2 வருட முன் அனுபவம் இருக்க வேண்டும். இதற்கு ஊதியமாக ரூபாய் 10,000 வழங்கப்படும். அதன்பிறகு சமையல் மற்றும் பராமரிப்பு பணிக்கு 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 3 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு ஊதியமாக 6,400 ரூபாய் வழங்கப்படும். இந்த 3 பணிகளுக்கும் மகளிர் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இது தற்காலிக பணியாகும். இந்த பணிக்கு சுழற்சிமுறையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்கு தகுதியானவர்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.